--- --:--:-- --

ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு..!

3

ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுனர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக 40 பேருடன் சென்ற அரசு பேருந்து பயணத்தின் பொழுது ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

 

உடனடியாக ஓட்டுநர் புருஷோத்தமன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி உள்ளார். அதே இடத்தில் மயங்கி விழுந்த ஓட்டுநரை , நடத்துனர் மற்றும் பயணிகள் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

 

ஓட்டுநரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஓட்டுநர் உயிர் பிரியும் நேரத்திலும் பேருந்தை நிறுத்தி தங்கள் உயிரை காப்பாற்றியதாக பயணிகள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon