--- --:--:-- --

மகன் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட தாய்..!

4

மகன் திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டதால் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை காசிமேடு குப்பத்தை சேர்ந்தவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.

 

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

 

இதுகுறித்து போலீசார் விசாரணையில் குடும்ப பிரச்சனையில் மகன் திட்டியதால் தாய் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon