--- --:--:-- --

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

7

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் வளரறி மதிப்பீடு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் வளரறி மதிப்பீடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காலாண்டு தேர்வு முறையில் எண்ணும் எழுத்தும் செயலி மூலம் மதிப்பீடு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மதிப்பீட்டை முழுமையாக வரும் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியரை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon