திமுகவை குற்றம் சாட்டிய சசிகலா..!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என வி.கே. சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சேலம் நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த சசிகலா நேற்றிரவு ஈரோடு வந்தார்.

 

ஈரோடு பூங்காவிற்கு வந்த சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பேசிய அவர் மின் கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை முடக்கி உள்ளதாகக் குற்றம்சாட்டினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.