--- --:--:-- --

ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு..!

10

கேரளாவில் ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாமல் உடைத்ததால் ஏற்பட்ட தாமதத்தில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரின் உயிர் பறிபோனது.

 

ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி முயற்சித்தபோது ஆம்புலன்சில் கதவை திறக்க முடியாமல் போனது.

 

இதனையடுத்து அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை உடைத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு காலதாமதம் ஆனதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon