தனியார் பேருந்தில் தீ பற்றிய விவகாரத்தில் 2 சிறுவர்கள் கைது..!
சென்னை தாம்பரத்தில் தனியார் பேருந்தில் தீ பற்றிய விவகாரத்தில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று ஜிஎஸ்டி சாலையில் தனியார் பேருந்து பற்றி எரிவதை முன்னிட்டு தாம்பரம் காவல்துறையினர் விசாரித்தனர்.
தாம்பரம் பகுதியில் இரண்டு பேரிடம் அலைபேசியை பறித்த சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற பொழுது அந்த வாகனம் பேருந்து மோதியதில் பெட்ரோல் டேங்க் வெடித்தது. அப்போது அந்த பேருந்து தீ பற்றியது. சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சிறுவர்களை அடையாளம் கண்டு இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





