--- --:--:-- --

ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவி..!

3

மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர் கால்களை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நெஞ்சை பதைபதைக்க செய்யும் வீடியோ காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் பயணம் செய்தனர். ரயில் புறப்படும் நேரத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் ரயிலில் ஏறினர். அப்பொழுது அரசுப்பள்ளி மாணவி அந்த படிக்கட்டு அருகே நின்றவாறு நடைமேடையில் கால்களை தேய்த்தவாறு நடைமேடை முடியும் வரையில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்தார்.

 

இதனை அந்த ரயில் பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட அது தற்போது பலரால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon