காணாமல் போன நபர் சாலையோர கால்வாயில் சடலமாக மீட்பு..!
நாகர்கோயிலில் காணாமல் போன நபர் சாலையோர கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஐயப்பன் என்பவரை காணவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நாகர்கோவிலில் சாலையோரம் உள்ள கால்வாயில் கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது காணாமல் போனது தெரிய வந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பன் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





