ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்..!
தரங்கம்பாடி தாலுக்கா கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். கூலி தொழிலாளியான இவருக்கு பிரவீனா என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கருவுற்ற அவருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் மூன்று கரு வளர்ந்தது தெரியவந்தது.
அந்த பெண்ணுக்காக உறவினர்கள் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர். இந்த நிலையில் 10 மாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர்.
ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த பெண்ணுக்கு மூன்று அழகான பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.
ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்ததால் மருத்துவர்கள் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். பின் 3 குழந்தைகளும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





