மாமியார் தான் மரணத்திற்கு காரணம் எனக்கூறிவிட்டு உயிரை விட்ட மருமகள்..!
உயிரை மாய்த்துக்கொள்ள மாமியார் தான் காரணம் என குரல் பதிவு வாயிலாக சகோதரிக்கு செய்தி அனுப்பிவிட்டு கருவுற்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை வேளச்சேரியை சேர்ந்தவருக்கும் தியாகராய நகரை சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகிறது. மாமியார் தொடர்ந்து குறை கூறியதால் ஒன்றரை மாதம் முன்பு இவர் தாய் வீட்டிற்கு சென்றதாகவும் அவரை அழைத்து செல்ல கணவர் முயற்சிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நாளில் தன் சாவிற்கு காரணமான மாமியார் தான் காரணம் என குரல் பதவி அனுப்பியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவலர்கள் இந்துமதியின் உடலை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஐந்து மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




