இன்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கிறார் இளையராஜா..!
இசையமைப்பாளர் இளையராஜா இன்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கவுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தடகள வீராங்கனை பிடி உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர், பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் மாநிலங்களவை நியமன எம்பிகளாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் மாநிலங்களவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் அன்றைய தினம் இளையராஜா பதவி ஏற்காத நிலையில் இன்று மாநிலங்களவை எம்பி ஆகப் பதவி ஏற்க உள்ளார். இதற்காக டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




