--- --:--:-- --

கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

5

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மினிவேன் மீது அதி வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள பகுதியில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கழுகு கோட்டம் கிராமத்திற்கு 15 பேருடன் சென்று கொண்டிருந்த மினி வேன் மீது கார் பயங்கரமாக மோதியது.

 

இந்த விபத்தில் சாலையோர ஓடையில் விழுந்த மினி வேனில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த பதினோரு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon