--- --:--:-- --

மாணவியின் இறுதி சடங்கு நாளை நடைபெறும்..!

1

ள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் இன்று விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த மாணவியின் தரப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

 

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதி சடங்கு நாளை வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் நடைபெறும் என தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon