பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை சமூகம் கேவலமாக எண்ணுவது தவறு..!
பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை கேவலமாக நினைப்பதை சமூகம் இன்னும் திருத்திக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் புனே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு 3பெண் குழந்தைகள் பிறந்தன.
மூன்று பெண் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் உயிர் தப்பிய சத்யாவுக்கு வேலூர் விரைவு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பெண் குழந்தை பெறுவதை கேவலமாக எண்ணும் போக்கு இன்னும் தொடர்வது குறித்து வேதனை தெரிவித்து சத்யாவை விடுதலை செய்து நீதிமன்றம் உயிருடன் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைப்பதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராகி குழந்தைகளை படிக்க வைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




