மாணவி ஸ்ரீமதி உடலை பெறுவது தொடர்பாக பெற்றோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை..!
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு பிறகு உரிய விவரம் தெரியவரும் என கள்ளக்குறிச்சி எஸ்பி தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளி கள்ளக்குறிச்சி எஸ்பி மக்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் பள்ளி வரும் வரை மாணவி மரணம் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பு புலனாய்வுக் குழுவும் சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மாணவி ஸ்ரீமதி உடலை பெறுவது தொடர்பாக பெற்றோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய எஸ்பி பள்ளி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கைது நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




