72 மாணவர்களை தாக்கிய 12 ஆம் வகுப்பு ஆசிரியர்..!
விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் 72 மாணவர்களை தாக்கியதால் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர் 72 மாணவர்களை பிரம்பால் தாக்கியதால் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. மேற்கொண்டு எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




