ஜீன்ஸ் அணியக்கூடாது எனக்கூறிய கணவனை கொலை செய்த மனைவி..!
பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என கண்டித்த 18 வயது கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜந்தாரா நகரை சேர்ந்த புஷ்பா என்று சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பின் புஷ்பாவை ஜீன்ஸ் அணியக்கூடாது என கணவர் கண்டித்ததையும் மீறி அவர் ஜீன்ஸ் அணியவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. கடந்த ஜூலை 16இல் வாய் சண்டை கை கலப்பானதில் கணவர் இறந்துவிடவே மாமியார் அளித்த புகாரின் பேரில் மனைவி புஷ்பா கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




