நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விலைவாசி உயர்வு, அரசு வேலை வாய்ப்பு திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட 11 முக்கிய பிரச்சினைகளை இந்த கூட்டத்தொடரில் எழுப்ப உள்ளதாக அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




