செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா..!
திருமணத்திற்குப் பிறகு முதன் முறையாக செய்தியாளர்களை தம்பதியாக சந்தித்த நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் செய்தியாளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் முடிந்து மீண்டும் சென்னை திரும்பினார். திருமணத்தில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




