--- --:--:-- --

திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் 3 குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீச்சு..!

7

பெங்களுருவில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் விவாகரத்தான மூன்று குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசனை திரவிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயதான பெண்ணும் அகமது என்பவரும் மூன்று ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

 

கடந்த சில வாரங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்த நிலையில் அதனை ஏற்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் முகம் முழுவதும் காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon