--- --:--:-- --

திருப்பதி தேவஸ்தானத்திடம் மன்னிப்பு கோரிய விக்னேஷ் சிவன்..!

6

நடிகை நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோயில் விதிகளை மீறி மாடவீதிகளில் காலணியுடன் நடந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

 

ஏழுமலையான் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பின்னர் மாட வீதிகளில் நடந்து சென்றனர். அப்போது கோயில் விதிகளை மீறி காலணி அணிந்தபடியே மாடவீதிகளில் நயன்தாரா நடந்து சென்றார். திருமணத்திற்குப் பிந்தைய போட்டோஷூட் எனப்படும் படப்பிடிப்பையும் நடத்தினர்.

 

இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி, நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அறியாமல் தவறு செய்து விட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon