கோலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். பல வருட காதல் பயணத்திற்கு அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள், இது குறித்து அவர்கள் அறிவிக்கும் முன்பே ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியது.
இதற்கிடையே தற்போது இவர்கள் திருமணம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஆம், ஜூன் 9 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அவர்கள் திருமணம் நடைபெறுகிறதாம்.
மேலும் அவர்கள் திருமணத்தை ஆவணப்படமாக இயக்க இருக்கிறாராம் இயக்குனர் கவுதம் மேனன். அதனை பிரபல OTT தளமான Netflix-ல் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.