--- --:--:-- --

நீச்சல் குளத்தில் போட்டோ வெளியிட்ட நடிகை ரைசா..!

11

மிழ் சினிமாவில் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் ரைசா வில்சன். ஒரு மாடலான இவர் பிக்பாஸ் வருவதற்கு முன்பே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ரைசா ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். பின் துருவ் விக்ரமுடன் இணைந்து ஆதித்ய வர்மா படத்தில் நடித்தார்.

 

அதன்பிறகு ரைசா படங்கள் பற்றிய விவரம் எதுவும் வெளியாகவில்லை, ஆனால் அவர் அடிக்கடி எடுக்கும் போட்டோ ஷுட் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் நன்றாக வைரலாகும்.

 

அப்படி இப்போது அவர் தனது தோழியுடன் கோவாவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon