ஆணாக மாறிய தமன்னா..!
நடிகை தமன்னாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அதிகம் அறியப்படும் நடிகையாக இருக்கிறார் அவர்.
சமீபத்தில் அவர் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு ஹாலிவுட் நடிகைகள் போல உடை அணிந்து சென்று இருந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.
இந்நிலையில் கடந்த வாரம் தமன்னா நடிப்பில் F3 படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அந்த படத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், மெஹரீன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஷூட்டிங் செய்யும்போது தமன்னா மேக்கப் போட்டு ஆணாக மாறி இருக்கும் வீடியோ ஒன்றை தமன்னா வெளியிட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




