சாதி கயிறு கட்டிய மாணவன்..நடு ரோட்டில் மோதல்..!
நெல்லையில் சாதி கயிறு கட்டிய மாணவன் மீது தாக்குதல் நடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்த நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பிளஸ் 1 மாணவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின.
இதனிடையே சாதி கயிறு கட்டியதால் மாணவர்கள் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மாணவரின் இந்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





