--- --:--:-- --

பூட்டப்பட்ட வீட்டுக்குள் மர்மமாக இறந்து கிடந்த நபர்..!

5

சென்னையில் பூட்டப்பட்ட வீட்டிற்குள் கணவர் இறந்து கிடக்க சடலத்தின் அருகிலேயே மனைவி இரண்டு நாட்களாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புரசைவாக்கம் தெருவில் அசோக் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார்.

 

இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான மகள் ஆர்த்தி தனது கணவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தனது அப்பாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து போன மகள் போலீசாருடன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

 

வீடு உள்பக்கம் தாளிடப்பட்டு உள்ளது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் அவர் சடலமாக கிடந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி அருகிலேயே இருந்துள்ளார். தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மனநலம் பாதிக்கப்பட்டு இரு தினங்களாக சடலத்துடன் இருந்த அவரின் மனைவி பத்மினியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon