மே 26 இல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வெப்பச் சலனத்தின் காரணமாக வருகிற 26-ஆம் தேதி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 27ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 26-ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு, கேரளா, மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





