டிடி அக்கா பிரியதர்ஷினி கடல் அலையில் சிக்கிக்கொண்ட வீடியோ..!

விஜய் டிவியின் சீனியர் ஆங்கராக இருந்து வருபவர் டிடி. அவரது அக்கா பிரியதர்ஷினியும் ஒரு காலத்தில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் தான். டிடி மற்றும் அவரது அக்கா இருவருக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

 

பிரியதர்ஷினி நடத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். மதுரை ஆர்.முரளிதரன், மணிமேகலை ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்று கொண்டார் அவர். மேலும் குச்சிப்புடி, கதகளி என மற்ற பல விதமான நடனங்களும் கற்றுக்கொண்டு இருக்கிறார் அவர்.

 

இந்நிலையில் தற்போது பிரியதர்ஷினி கடற்கரையில் இருக்கும் பாறை மீது நடனம் ஆடி வீடியோ எடுத்து இருக்கிறார். அப்போது பெரிய அலை வந்து அவரை தள்ளி விட்டு இருக்கிறது. ‘ஷூட்டிங் பரிதாபங்கள்’ என சொல்லி அவர் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.