--- --:--:-- --

உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு – இந்த ஆண்டு முதல் ரூ.1,000 உதவி

2

பெண்களுக்கு உயர் கல்வியை உறுதி செய்யும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டணம் பல மடங்கு அதிகம் என விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

தேர்வு மற்றும் மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடித்த பின்னரே பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சீட் பெற்ற பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கை இடம்பிடிப்பது தவிர்க்கப்படும் என கூறிய அமைச்சர் பொன்முடி, ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பொறியியல் கலந்தாய்வுக்கு செல்போனில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon