தாஜ்மஹால் நிலத்தை சொந்தம் கொண்டாடும் பாஜக எம்.பி..!
இந்தியாவின் தாஜ்மஹால் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று பாஜக எம்பி உரிமை கோரியுள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றி இருக்கும் இடங்களை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை உத்தரவிட கோரி பாஜக நிர்வாகி ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த குடும்பத்தின் வாரிசான தியாகுமரி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய தியாகுமரி தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.
தாஜ்மஹால் இருக்கும் இந்த நிலங்கள் தங்களுக்கு சொந்தமானவை என்று கூறிய தியாகுமரி ஆனால் அந்த இடத்தை ஷாஜகான் அபகரித்துக் கொண்டார் என்று தெரிவித்தார். அப்பொழுது நீதி மன்றமும் இல்லை என்பதால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லாமல் போனது என்றும் அது தொடர்பான பதிவுகளை தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் அந்த ஆய்வுக்குப் பிறகு முடிவு எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





