--- --:--:-- --

இலங்கையில் ஏற்பட்ட பதற்றம்..கண்ணீர் புகை குண்டுகள்..ஒருவர் பலி..!

2

லங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்து போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால் அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை இலங்கை நம்புகளை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

 

இதனையடுத்து பதற்றம் அதிகரித்து போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

 

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon