இனிமேல் முகக்கவசம் கட்டாயம்..!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை போன்ற கட்டுபாடுகள் முழுவதையும் தளர்த்தி பல்வேறு மாநில அரசுகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா போன்ற இடங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இன்று உத்தர பிரதேச அரசு யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் லக்னோ, மீரட் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
பொது இடங்களுக்கு வரும் பொழுது பொது மக்கள் கட்டாயமாக கவசம் அணிந்து இருக்கவேண்டும் எனவும், இதன்மூலம் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





