மின்கம்பியை மிதித்த பெண் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சோகம்..!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காந்தி நகரை சேர்ந்த பொன்னுத்தாய் என்பவர் நஞ்சபுரம் பகுதியில் உள்ள இலவ மரங்களில் பஞ்சை எடுக்க செல்வது வழக்கம்.
அந்த வகையில் வழக்கம்போல சென்றவர், வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




