உயிர்பலி அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை..!
இலங்கையில் உயிர் காக்கும் மருந்துகளில் தீர்ந்து வருவதால் உயிர் பலி அதிகரிக்கும் என அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மருந்துகள் இல்லையெனில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கூறுகையில் பொருளாதார நெருக்கடி அதிகம் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ கருவிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை பெற முடியாது என்றும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





