திருமணமான நான்கே நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை..!
சென்னை கொரட்டூரில் திருமணமான நான்கு நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு கொரட்டூர் அக்ரஹார நெல்லையை சேர்ந்த சத்யா மற்றும் ராஜா ஆகியோருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. எனினும் இந்த திருமணத்தில் சத்யாவிற்க்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 7 ஆம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





