வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
இந்தோனேசியா மற்றும் ஷெசேல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 3 மீனவர்கள் இந்தோனேசிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக அந்தநாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் கடந்த 7ஆம் தேதி ஷெசேல்ஸ் கடற்பகுதியில் நுழைந்ததாக கோரி தமிழக மீனவர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





