--- --:--:-- --

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை..!

3

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

மாவட்ட ஆட்சியர்களுடன் வாயிலாக காணொளி வாயிலாக ஆலோசனை நடத்திய பிறகு மாநில தேர்தல் ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தேவைப்பட்டால் மாவட்டம் முழுவதும் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சிவகங்கை, கன்னியாகுமரிம திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon