--- --:--:-- --

பள்ளிக்குள் நுழைந்த கரடி..!

10

குன்னூரில் பள்ளி சமையலறையில் கரடி நுழைந்து பொருட்களை சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நான்சர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் நுழைந்த கரடி சமையல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளது.

 

அங்கிருந்த பாமாயில் எண்ணெய் போன்றவற்றை நாசமாக்கிவிட்டு கரடி சென்றுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon