--- --:--:-- --

78 முறை கோவிட் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்த நபர்..!

9

78 முறை கோவிட் பரிசோதனை செய்து கொண்டதில் அத்தனை முறையும் பாஸிட்டிவ் என வந்த நபர் இணையத்தில் வைரலாகி வருகிறார். கொரொனா உலகம் முழுவதும் பல லட்சம் பேரின் உயிர்களை பறித்து உள்ளது.

 

இந்த நிலையில் 14 மாதங்களில் 78 முறை covid-19 பரிசோதனை செய்து கொண்ட ஒருவருக்கு அத்தனை முறையும் பாசிடிவ் என வந்துள்ளது. அதைத் தொடர்ந்து 9 மாதங்கள் மருத்துவமனையிலும், ஐந்து மாதங்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

துருக்கியின் இஸ்தான்புல் பகுதியை சேர்ந்தவர் முசாபர். 56 வயதாகும் இவர் கொரொனா உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது கடந்த 2020 ஆம் ஆண்டு முதன் முறையாக பரிசோதனை செய்தார். அந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது.

 

அதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார். ஆனால் கொரொனாவில் இருந்து மீண்டு வரவில்லை.

 

மீண்டும் மீண்டும் covid-19 பரிசோதனை செய்தாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் தொற்றில் இருந்து விடுபட்டதாக முடிவுகள் வரவில்லை. 78 முறை கோவிட் டெஸ்ட் எடுத்துள்ளார். அத்தனை முறையும் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அதனால் நொந்து போயுள்ளார் முசாபர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon