--- --:--:-- --

நிலவில் மோதி வெடிக்கப்போகும் ஏவுகணை..!

7

லான் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் நிலவில் மோதி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ராக்கெட் 2015 ஆம் ஆண்டு விண்வெளிக்கு .அனுப்பப்பட்டது. வானிலை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது.

 

செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ராக்கெட் செயற்கை கோளில் இருந்து தனியாகப் பிரிந்து சென்றது. தனது பணியை முடித்த பிறகு பூமியை நோக்கி திரும்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லாமல் போனதால் விண்வெளியில் கைவிடப்பட்டது.

 

இதனால் அந்த ராக்கெட் கடந்த 7 ஆண்டுகளாக பூமி நிலவு மற்றும் சூரியனின் வெவ்வேறு ஈர்ப்பு விசைகளால் ஈர்க்கப்பட்டு விண்வெளியில் ஆபத்தான முறையில் சுற்றி வந்தது. இந்த ராக்கெட் வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது நிலவின் மேற்பகுதியில் மோதும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon