--- --:--:-- --

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் விசாரணைக்கு துணை நிற்போம்..!

1

அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல்துறை மற்றும் கல்வித் துறையில் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் துணை நிற்கும் என தனியார் பள்ளி குழுமம் உறுதியளித்துள்ளது.

 

அரியலூரை சேர்ந்த மாணவி தஞ்சை தனியார் பள்ளியில் தங்கி படித்துக் கொண்டிருக்கையில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான வீடியோவில் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி குழுமத்தின் நிர்வாக சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 

மாணவியின் இறப்பு பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அந்த மாணவி விடுமுறையில் கூட த்திற்கு வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் தங்களுடன் தங்கி இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

எனவே இது தொடர்பாக விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon