இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்க காசு பரிசு..!

ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்க காசு பரிசாக வழங்கப்படும் என தயாரிப்பாளர் குஞ்சுமோன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

தயாரிப்பாளர் குஞ்சுமோன் தமிழில் பிரம்மாண்ட படங்களை தயாரித்து விளம்பரப் படுத்துவதில் புகழ் பெற்றுள்ள அவர் சூரியன், ஜென்டில்மேன், காதலன் என பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்த குஞ்சுமோன் சில காலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

 

இந்த நிலையில் அவர் மீண்டும் திரைத்துறையில் ஜென்டில்மேன் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என சரியாக கண்டுபிடித்து தரும் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.