புதுச்சேரியில் ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி மாநிலத்தில் கொரொனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த வாரம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆனால் மேலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் 10, 11, 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரும் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தார். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





