ஆயுதப்படை போலீசார் 16 பேருக்கு கொரொனா தொற்று உறுதி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசார் 16 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் 54 பேருக்கும், மாவட்டம் முழுவதும் 139 பேருக்கும் கொரொனா தொற்று உறுதியான நிலையில் நாகர்கோவில் ஆயுதப் படையில் பணியாற்றும் 11 போலீசார் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஆயுதப்படை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





