தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை..!
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா என்பது குறித்து மருத்துவ துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா அதிகரித்து வரும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கொரொனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் இருக்கிறது. அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் இறையன்பு, அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




