திருச்சி என்.ஐ.டி. மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா..!
திருச்சி என் ஐ டியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர் சென்று திரும்பிய 577 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி என் ஐ டி யில் தற்போது தொற்று உறுதியானவர்களில் பலர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஓமிக்ரான் தொற்றா என்பதை கண்டறிய மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





