திருச்சியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழப்பு..!
திருச்சி புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழந்தார். நேற்றிரவு சஞ்சய் போதை ஊசி செலுத்தியதாக கூறப்படும் நிலையில் வேறு காரணத்தால் உயிரிழப்பா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் போதை ஊசிப் பழக்கத்தால் கடந்த 40 நாட்களில் நடந்த 3வது மரணம் இது. ஜூன் 8ம் தேதி இளம்பெண் ஒருவரும், 30ம் தேதி இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




