--- --:--:-- --

உடலை உடற்கூராய்வு செய்யவேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை..!

7

தனது உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் எனக் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு சென்னையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இளைஞர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பெற்றோர் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் வீட்டிற்கு சென்ற உறவினர் ஒருவர் வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் ஜன்னலை திறந்து பார்த்தபோது அர்ஜுன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

 

தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல தனது பெற்றோரிடம் உடலை ஒப்படைக்குமாறும் அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் கையில் சிக்கி இருக்கும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஞாயிற்றுக்கிழமை மதியம் தான் அர்ஜுன் தனது காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படும் நிலையில் காதல் தோல்வி காரணமாக தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon