வயிற்றிலேயே உயிரிழந்த குழந்தை..!
திருப்பூர் அருகே கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவத்தில் 37 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்தகுலம் மட்டம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து.
தேங்காய் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். இவரின் மனைவி ராஜராஜேஸ்வரி. இவர் கருவுற்றிருந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். வயிற்றுவலி ஏற்படவே உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிசு வயிற்றிலேயே உயிரிழந்துள்ளது.
ஆனால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் பணம் செலவழித்துள்ளார். ஜோதி மணியே சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 36,000 ரூபாய் பணத்தை அந்த பெண் திரும்ப ஒப்படைக்க கூறப்பட்டது. ஆனால் அந்த பணத்தை கணவர் ஏற்க மறுத்துவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





