--- --:--:-- --

பறந்து சென்று மக்கள் மீது விழும் வெண்பஞ்சு போன்ற நுரை..!

4

மதுரை அருகே கண்மாய் நிரம்பி தண்ணீர் வழிந்து நுரை பொங்கி சாலையில் வருகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. அந்த கண்மாய் நிறைந்த தண்ணீர் வெளியேறுகிறது.

 

கண்மாயில் கழிவுநீர் கலந்து வருவதால் வெளியேறும் தண்ணீரில் இருந்து அதிக அளவில் நுரை வெளியேறி வருகிறது. அப்படி வெளியேறும் நுரை சாலைகளில் பரவி வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் நுரைகள் பறந்து பொதுமக்கள் மேல் விழுகின்றன.

 

எனவே கழிவுகள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon